வில்வாஷ்டகத்தில் வில்வத்தின் மகிமை விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு வில்வத்தை எடுத்து சிவபெருமானின் திருவடியில் சேர்த்தால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்று உள்ளது.

ஒரு குரங்கைப் புலி துரத்த, அந்தக் குரங்கு வில்வ மரத்தின்மேல் ஏறி பயந்து நடுங்கி வில்வ இலைகளை உதிர்த்தது. அங்கு பழைய சிவலிங்கம் ஒன்று வில்வமரத்தின் கீழ் இருக்க, அந்த சிவலிங்கத்தின் மேல் வில்வ இலைகள் விழுந்தன

. அது ஒரு மாலை நேரம். நித்திய பிரதோஷ வேளையில் சிவபெருமானைப் பூஜித்த பலன் குரங்குக்குக் கிடைத்து; அதனால் அந்தக் குரங்கு சக்கரவர்த்தியாகப் பிறந்தது என்பார்கள்.

வில்வ தளம் வாடியிருந்தாலும் பூஜிக்கத் தகுந்தது. 

வில்வ மரத்தின் கீழ் இயற்கையாக மரணம் அடைபவன் சிவலோகப் பதவி அடைகிறான்.